தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, September 23, 2013

'அதில்' அதிக நேரம் ஈடுபட என்ன செய்யவேண்டும்?

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம்.  அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.  இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

 

விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள்  கொண்டுவந்துவிட முடியும்.  இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.

 

முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.  இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும்.  ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம்.  அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.

 

செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம்.  உணர்வடைதல், செயல்படுத்தல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன்னொரு வகையில் சொல்வதென்றால்,ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும் அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும் போது  உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

 

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால்  கூட  நல்லது.  அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பது போல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக் கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

 

அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.  உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது.  இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும் போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.

 

ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிகைகளில் இறங்க முடியும்.  அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

 

சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.  யாராவது பார்த்துவபிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள்.  இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது.  அதனால்  முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும்.  உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

 

விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும்.  அடிக்கடி இப்படிச் செய்துபார்பது அவசியம்.  என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க  முயற்ச்சிப்பது பயன் தராது.  தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.

 

முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும்.  பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரரத்தை நீடிக்க வேண்டும்.   இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம்.  இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வசிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துக்கொள்ள வேண்டும்.  அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.

 

மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது.  மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும்.  ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸிக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

 

வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது.  ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துப்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியம்.

 

ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுக்கொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம்.  ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது.  இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு.  அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.  எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால்,  கூடுதல் நேரம் விறைப்பும்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

 

ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல் பாடுகளுக்குப் பயன்படுவதை பிடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.  இதனால், ஆண் ஊறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வ கிடைக்கும்.  இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.

 

விந்து வெளிவருவதுபோல் இருக்கும்   நேரத்தில் உடல் உறுப்புக்கள் அமைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக் கொள்வது நல்ல முறையில்  பயன்தருவதாக இருக்கும்.  அதாவது ஆசனவாய்,  அடிவயிறு என அனைத்தையும்  மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால் விந்து வெளிவருமு: நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.

 

ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது,  வேறுசெயலுக்கு மாற்றுவது, வளிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.

 

ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.

 

விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செலாற்ற முடியும்.

 

பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம்  அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.  ஆண்-பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால் அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும்.  போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால் முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.

 

இவை அனைத்தையும் விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும்.  இன்று கூடுதலாக கொஞ்சநேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும்.  ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும்  அவசியம்.  எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது.  இது எளிதில் சரி செய்து இன்பம் தரக்கூடிய சாதாரண பிரச்சனை என்பதை இருவருமே அறிந்திருக்க வேண்டும்.

Saturday, July 6, 2013

கர்ப்பிணிகளே வீட்டை கிளீன் பண்றீங்களா? கொஞ்சம் கவனிங்க !!

கர்ப்ப காலத்தில் வீட்டை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தப்படும் கிளீனிங் பொருட்களால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு வரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி படிக்கும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான குழந்தைகள் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்குக் காரணம் கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் பயன்படுத்திய ரசாயனம் அடங்கிய சுத்தப்படுத்தும் பொருட்கள்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்தினர்.

அதேசமயம் வீட்டை சுத்தமாக பளிச் என வைத்துக்கொள்ளும் புதுமணப் பெண்களுக்கு எளிதில் கரு உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நமது வீட்டில் உள்ள மின்னணுப் பொருட்கள், கார்பெட்டுகள், ஜன்னல் திரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் சேரும் தூசியால் பெண்களின் கர்ப்பமாகும் வாய்ப்பு தடைபடும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள பொருட்களின் மீது படியும் தூசியில் உள்ள, பிபிடிஇ (PBDE) வேதிப் பொருட்களை சுவாசிக்கும்போது அவை நமது உடலின் கொழுப்பு செல்களில் போய் தங்கிக் கொள்கின்றன. ரத்த அளவில் பிபிடிஇ அளவு அதிகம் உள்ள பெண்களுக்கு கர்ப்பமாவது தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேசமயம், இந்த அளவு குறைவாக உள்ள பெண்கள் விரைவில் கர்ப்பமடைகிறார்கள்.

எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் பிபிடிஇ அளவு பெண்களின் ரத்தத்தில் சேருவது குறைந்து, அவர்கள் தாய்மை அடைவது விரைவாக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பிபிடிஇ அளவு குறித்த ஆய்வுகள் இதுவரை மனிதர்களிடையே பெருமளவில் நடத்தப்படவில்லை. விலங்குகளில்தான் இது அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன என்கின்றனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள்.04-swellingfrongpage

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!!

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. . அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.

சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு
பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ்
பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட்
பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ்
(Squash) ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி
தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம்
சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள்
இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு
உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.images (1)

Friday, July 5, 2013

வழுக்கையிருந்து மீண்டு மீண்டும் முடி வளர: விரிவான விளக்கங்களுடன்.

moddaiதலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.

முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விடயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன.

புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.

ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விடயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம்.

பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.

இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

* ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

* இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.

* மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.

* சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

* சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.

* நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:

* பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.

* பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

* சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

* ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

* கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:

* வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

* தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

* இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு.

* உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை, அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

தலைமுடி மீண்டும் வளர

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Wednesday, July 3, 2013

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

waterதினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை:

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்

சர்க்கரை வியாதி – 30 நாட்கள்

மலச்சிக்கல் – 10 நாட்கள்

புற்றுநோய் – 180 நாட்கள்

காச நோய் – 90 நாட்கள்

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

சாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

images-12நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள்

babyபொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளை பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டனஸ், ஆகியவை முக்கியமானவை.

1.அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், நீண்ட நாள் வயிற்றுப் போக்கால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இந்த நோய் உண்டாகௌம்போது ஆபத்து ஏற்படுகிறது, இதனால் நிமோனியா, கண்பார்வையில் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகள் எற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அம்மை நோயின் அறிகுறிகள்- மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகௌம், முகம் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.

2.தொண்டை அடைத்தல்- இதுவும் மிக அபாயகரமானதாகும், இதனால் மூச்சு முட்டி உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இன்னோய்க் கிருமிகள் ஏற்படும் நச்சு காரணமாக இதயமும் நரம்பு மண்டலமும் பாதிப்படையலாம்.

இதன் அறிகுறிகளாக சிலவற்றை குறிப்பிடலாம். முதலில் குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும் வாட்டமுடனும் இருக்கும், சாப்பாடு விளையாட்டு ஆகியவை இருக்காது, கழுத்து வீக்கம் இருக்கும், மேலும் குழந்தைகள் பலவீனமடையும், கிருமிகள் சுவாசப் பகுதிக்குத் தாவும்போது சுவாசம் தடை படும் அபாயம் உண்டு, இதனால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

3.வறட்டு அல்லது குத்து இருமல்- தொடர் இருமலால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது, தொடர்ந்து இருமல் இருப்பதால் சில சமயங்களில் வாந்தி எடுக்கலாம், ஊட்டச் சத்து குறையும், முதலில் சளி பிடிக்கும், பிறகு இருமல் வலுக்கும் இதற்கு தற்போது மருந்துகள் ஏராளம் வந்து விட்டதால் இதன் ஆபத்தை மருத்துவ உலகம் ஏறத்தாழ களைந்து விட்டது என்றே கூறலாம்.

4.இளம்பிள்ளை வாதம்– மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.

5.டெட்டனஸ்- பிறந்த குழந்தைகளை இந்த நோய் தாக்கினால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, தொப்புள் கொடியை சுத்தம் செய்யப்படாத கத்தியால் அறுப்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. திறந்த புண்கள் மூலமாக இப்புண்கள் பெரியவர்களையும் பாதிப்பதால், கருவுற்ற பெண்கள் இதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகிறது.

பிறந்து 5 முதல் 7 நாட்கள் கழித்து குழந்தை வாயைத் திறக்காது, பால் குடிப்பதை நிறுத்தி விடும், வலிப்பு ஏற்படும் இதனால் இறப்பு ஏற்படலாம். வளர்ந்தவர்களுக்கு வாய், மற்றும் கை கால்கள் விறைத்து ஒரு கட்டத்தில் உடம்பே விறைத்து விடும் அபாயம் உள்ளது, இதற்கும் தகுந்த மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.

6.காச நோய்- இந்த நோய் தற்போது முன்பிருந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இல்லாவிட்டாலும், தற்போதும் சுகாதாரக் குறைவால் இன்னமும் சில பகுதி மக்களிடையே இது அச்சுறுத்தும் ஒரு நோயாக இருந்து வருவது உண்மைதான். இந்த நோய் குழந்தைகளை தாக்கும் போது குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும், விளையாட்டில் நாட்டம் இருக்காது, உடல் எடை குறையும், காய்ச்சல் தலைவலி, நாற்றமுடன் கூடிய சளி வரும் இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். இருப்பினும் முறையான சோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கையாண்டால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்..

Sunday, June 16, 2013

நீரிழிவு...

8.Bildidee_Reinzeichnung_091019நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்.

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?

Woman Sleeping with Alarm Clockநல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.

உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல், தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது.

1. தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் :
ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு ஒப்பான கருத்து இது. இதற்குச் சரியாகப் பதில் சொல்வது கடினம். அதுபோல்தான் தூக்கமும். தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருநாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறுமணி நேரத் தூக்கம் அவசியம். இந்த நேரம் குறைந்தால், இதய நோய் அல்லது கான்சர் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை ‘டயரி’யில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன்படி எழுந்திருக்கும் _ தூங்கும் நேரத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நோட் பண்ணுவது அவசியம். தூக்க ஊக்கிகள் பயன்படுத்தாமல் தூக்கம் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

2. பிற்பகல் விழாவில் போர் அடிக்கும் பேச்சைக் கேட்டவுடன் தூக்கம்.
இது இயல்பாக வருவதுதான். ஆனால் ஒரு சிலருக்குத் தூக்கம் வராது. இமைகள் மூடியிருப்பது போல் தோன்றும். ஆனால், தூக்கம் கண்களைத் தழுவாது. தினமும் ஏழு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் இருந்தாலும், மீதியிருக்கும் ஒருமணி நேரத்தை உடல் ஈடு செய்ய விரும்பும். சிலர் அதனை ஈடு செய்யும் விதமாகப் பகலில் குட்டித் தூக்கம் போடுவார்கள். இருப்பினும் நாள்பட்ட தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால், டயாபடீஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

3. தூக்கமின்மை இருந்தால், சீக்கிரம் படுக்கச் செல்ல வேண்டும்.
பொதுவாக தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள். தூக்கம் வரவில்லையே என்பதற்காகப் படுக்கை அறைக்குச் செல்லவே சிலர் விரும்புவதில்லை. நமக்குத்தான் தூக்கம் வருவதில்லையே என்ற எரிச்சல். இது தவறு. மாறாக தூக்கமின்மைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு டென்ஷன்... உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்குப் பொதுவான காரணங்கள்.

என்ன செய்யலாம்?
வழக்கத்தை விட, ஒரு மணிநேரம் ‘லேட்’டாகப் படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உதாரணமாக எண்களை மனதிற்குள் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது...
சுவாரஸ்யமில்லாத புத்தகங்கள் படிப்பது..,

படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதன்மூலம் தசைகள் இலகுவடையும். உடல்சூடு குறையும்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

குட்டித் தூக்கம் : தூக்கமின்மை இருப்பவர்களுக்கு அவ்வப்போது ‘குட்டித் தூக்கம்’ வரும். இதனால் ஓரளவு சமாதானம் அடையலாம். இரவு ‘ஷிஃப்’டில் வேலை செய்பவர்களுக்கு, தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் குட்டித் தூக்கம் போடுவதில் தவறில்லை. அதற்காக, பலமணி நேரம் ‘குட்டித் தூக்கம் போடாமல் இருப்பது நல்லது.

தூக்கமின்மை இருந்தும், பணிகள் பாதிப்பதில்லை :
இரவில் இரண்டு மணி நேரத் தூக்கம் பாதித்தால், மறுநாள் உடலில் அசதி ஏற்படும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. பெரிய இயந்திரங்களை இயக்குபவர்களாக இருந்தால், முடியாமல் போகும். டூ வீலர் அல்லது கார்களை ஓட்ட முடியாது. அதனால் ஆபீஸ் போவதற்கு நண்பர்களின் உதவியைக் கேட்கலாம்.

தொடர்ந்து ஒருவாரம் வரை இப்படியே இருந்தால், உடல் சூடு அதிகரிக்கும். அதைத் தவிர்ப்பது முக்கியம்.

வாரத்தின் இறுதி நாட்களில் தான் தூக்கம் வருகிறது.
சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் ஒரு குட்டித் தூக்கம் மட்டும் போடுவது உண்டு. தூக்கமின்மை பாதிப்பு இருப்பவர்கள் தவிர, மற்றவர்களுக்கு இந்த ‘பிராக்டீஸ்’ மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் முடிந்தவரை தினமும் இரவில் தூங்குவது அவசியம். வேறு வழியில்லை என்றால், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிப்பது முக்கியம்.

படுக்கப் போகும் முன்பு உடற்பயிற்சி :
உடற்பயிற்சி காலையில் செய்யலாம். படுக்கப் போகும் முன்பு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த ‘பிராக்டீஸ்’ செய்வதுண்டு. இருப்பினும், தூக்கத்துக்கும், ‘பெட் டைம்’, உடற்பயிற்சிக்கும் சம்பந்தமில்லை. தேவையேற்பட்டால், இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு எளிய உடற்பயிற்சி செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது.

தூக்கம் வருவதற்கான மாத்திரைகள் எடுப்பது :
தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன்பு மாத்திரைகள் எடுப்பது நல்லது. தவறில்லை. ஆனால், டாக்டர்கள் அட்வைஸ் அவசியம். ஒருசில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம். இதன் காரணமாக பக்க விளைவுகள் (வாந்தி, தலைவலி, சோர்வு) ஏற்படும். அதனால் கவனம் தேவை.

தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாதல் :
இது ஆபத்து.

இரவில் லேட்டாகத் தூங்கி அதிகாலையில் எழுவது :
நேரமில்லை. நான்கு மணிநேரம் மட்டுமே தூங்க முடியும் என்ற நிலை இருந்தால், இரவில் லேட்டாக (இரண்டு மணி) தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழலாம். இரண்டு மணி வரை தூக்கம் வருவதற்குரிய வழிகளில் இறங்கலாம். (போரடிக்கும் புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது இப்படி...)

தூக்கமின்மை இருப்பவர்கள் டாக்டரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். குறிப்பாக,

ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் :
தூக்கமில்லாமல் இருந்தால், காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். கால்களில் நமைச்சல் இருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை டெஸ்ட் செய்வது முக்கியம்.

மூச்சு விடுவதில் சிரமம் :
தூங்கும் போது மூச்சுவிட சிரமப்படுவார்கள். குறட்டைச் சத்தம் அதிகம் கேட்கும். உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு இந்த ‘ரிஸ்க்’ அதிகம்.

மனச்சோர்வு :
இரவில் தூங்காமல் இருந்தால் மறுநாள் உடல், மன சோர்வு ஏற்படும்.

தைராய்டு சுரப்பதில் பிரச்னை :
இந்த அறிகுறி தெரிந்தால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம். தைராய்டு ஸ்டுமுஹேங் ஹார்மோன் அளவு அதிகமிருந்தாலும் தூக்கம் வராது.

Saturday, June 15, 2013

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

Salt-"உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்...

‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.

விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு... வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்... உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.

கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது... உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்.... சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

Friday, June 14, 2013

ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள்!!!

ஜலதோஷத்தை-போக்குவதற்கு-இயற்கை-வைத்தியங்கள் (1)பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும்.
ஜலதோஷம் சாதாரணமாக மூக்கில் தொடங்குகிறது. ஆனால் மெதுவாக உடல் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இந்த ஜலதோஷம் தொடங்கியதற்கான சில அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண், குளிர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை.

இதற்கு செயற்கை மருந்துகளும் எப்போதும் முழுமையான நிவாரணம் வழங்குவதில்லை.

ஆனால் சில இயற்கை வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த முடியும்.

வரும் முன் காப்போம்

தொண்டை அடைப்பு மற்றும் ஜலதோஷம் பிடித்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்தல் வேண்டும். இதனால் உடலினுள் வைரஸ்கள் மேலும் நுழைவதை தடுக்க இயலும்.

நீராவி பிடித்தல்

நீராவி பிடித்தால் மூக்கடைப்பு மற்றும் மாரடைப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். சூடான நீராவி சுவாச பாதையில் இருக்கும் கிருமிகளை கொல்லும்.

மேலும் இது மென்மையான நாசி திசுக்களை, சூடான நீராவி காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு ஸ்டீம் இன்ஹேலர் இல்லாத நிலையில், சுடு தண்ணீரை பயன்படுத்தலாம்.

ஜலதோஷம் வருவதுப் போல் தோன்றினால், நீராவி பிடித்தலால் இதனை தடுக்க இயலும். ஏற்கனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஜலதோஷ வலி நிவாரணி மற்றும் ஸ்டீமரை பயன்படுத்துதல் வேண்டும்.

இஞ்சி டீ

ஆவி பறக்கும் சூடான இஞ்சி டீ குடித்தால், ஜலதோஷத்தை எளிமையாகப் போக்கலாம்.

புதினா டீ

புதினா மற்றும் துளசி இலைகள் சேர்க்கப்பட்ட டீயை ஜலதோஷத்தின் போது குடித்தால், தொண்டை மற்றும் சுவாச பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.

சூடான ரசம்

புளி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் சூடான ரசம், உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேற உதவுகிறது.

மேலும் மூக்கு மற்றும் கண்களில் நீர்பெருக்கெடுப்பால், நாசி பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகின்றது.

மஞ்சள் தூள்

பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும் செய்யலாம். ஏனெனில் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அது ஒரு பயனுள்ள தீர்வாகும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி, ஒரு தொற்று எதிர்ப்பு மருந்தாகும், ஜலதோஷத்திற்கு நன்கு அறியப்பட்ட மருந்தாக உள்ளது. எனவே ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து குடிப்பதால், உடலுக்கு எதிப்பு சக்தியானது அதிகரிக்கும்.

துளசி இலைகள்

குழந்தைகளுக்கு மூக்கு அடைத்திருந்தால், தேனுடன் துளசி இலை சாற்றை கலந்து ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். பெரியவர்கள் துளசி இலையை மென்று சாப்பிடலாம்.

Thursday, June 13, 2013

உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா?

cute_face_01அழகான உங்களது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம்
* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

* வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

* உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

* ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

* முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

* பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

* வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

* கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

Wednesday, June 12, 2013

ஆணிக்கூடு......

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

Veruca_right_foot_detail

Tuesday, June 11, 2013

பம்பளிமாஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள். . .

பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

பம்பளிமாஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் இது இறக்குமதி செய்யப்பட்ட பழம் என்று நினைத்துவிடாதீர்கள். இதன் பூர்வீகம் ஐரோப்பா நாடுகள் என்றாலும், நம் நாட்டின் மலைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.

வெள்ளைச் மற்-றும் இளஞ்சிவப்பு (ரோஸ்) நிறத்தில் காணப்படும். சுளைகள் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

Tamil - Bombalimas

English - Pummelo

Telugu - Pampalamasam

Malayalam - Bambitinarakam

Sanskrit - Mahanimbu

Bot. Name - Citrus decumana

பித்தத்தைக் குறைக்க . . .

ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு வாத, பித்த, கபம் போன்றவை அதனதன் நிலையிலிருத்தல் மிகவும் அவசியம். இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்பு உருவாகும். இதில் பித்த அதிகரிப்பு ஏற்பட்டால் உடலில் இரத்தம் சீர்கேடு அடைந்து, பித்த நீரானது மேல் நோக்கிச் சென்று கண் நரம்புகளைப் பாதித்து மூளையின் செயல்பாடுகளை குறைக்கும். இதனால் தலைவலி, ஞாபக மறதி, மன அழுத்தம் போன்ற பல தொல்லைகள் உருவாகும். இந்த பித்த அதிகரிப்பானது உடலின் தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. இந்த பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது.

கண்கள் பிரகாசமடைய . . .

கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும்.

மஞ்சள் காமாலை . . .

மனிதனைத் தாக்கும் கொடிய நோய்களுள் காமாலை நோயும் ஒன்று. ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்-கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் பலம் பெற . . .

நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உடல் மிகவும் இளைத்து காணப்படும். உடல் சோர்வுற்ற நிலையில் இருக்கும்.

இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மதிய வேளையில் கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறும்.

உடல் சூட்டைத் தணிக்க . . .

கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

இரத்த சோகை குணமாக . . .

இரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் நம் நாட்டில் 67 சதவிகிதம் பேர் உள்ளனர். மூலிகைகள், பழங்கள் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் எல்லாம் இங்கு உற்பத்தியாகியும் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மாறவில்லை.

இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.

அடிக்கடி வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு . . .

வயிற்றுப் போக்கு சிலருக்கு அடிக்கடி ஏற்படும். இதற்குக் காரணம் தெரியாமல் அடிக்கடி மருத்துவரை நாடுவார்கள். எந்த வகையான மருந்துகள் சாப்பிட்டாலும் இவர்களின் சீதளப் போக்கு அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சீதள தேகம்தான். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும்.

வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

papplimaas

Friday, June 7, 2013

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

images (4)1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.


6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.


8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது

தக்காளியால் உடல் எடை குறைக்கலாம்!

images (3)தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.


தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.


சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.


இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை...

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 87% சதவிகிதம் இருந்ததால், தன்னுடைய மார்பகங்களை மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் அகற்றிவிட்டார்' என்கிற செய்தி, உலக அளவில் ஏற்படுத்திய அதிர்ச்சி யைத் தொடர்ந்து, ''செய்திகளைப் படித்துவிட்டோ... கேட்டுவிட்டோ... மார்பகப்புற்று பற்றி அச்சம் கொள்ள வேண்டாம்'’ என்று சென்ற இதழில் அறிவுறுத்தியிருந்தார், சென்னையைச் சேர்ந்த பிரபல மார்பகப்புற்று நோய் நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. இந்த இதழில், மார்பகப்புற்று பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களைத் தருகிறார் டாக்டர்.

எதனால் ஏற்படுகிறது புற்று?

''நம் உடம்பு செல்களால் ஆனது. ஒரு வரைமுறைக்குட்பட்ட அந்த செல்களில் ஏதாவது பிறழ்வு ஏற்பட்டு, வரைமுறை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செல்கள் பெருகுகிறது என்றால், அதுதான் புற்றுநோய். மார்பக செல்கள் அப்படி பெருகினால், அது மார்பகப்புற்று. மார்பகங்கள் என்பவை, இதயம், மூளையைப்போல அத்தியாவசிய உறுப்பு இல்லை. குழந்தைக்குப் பால் கொடுப்பது மட்டுமே அதன் பயன். பின்னர் ஏன் மார்பகப்புற்று பயமுறுத்துவதாக உள்ளது என்றால், ரத்த ஓட்டத்தின்போது மார்பகம் வழியாக வரும் ரத்தத்தில் கேன்சர் செல்கள் கலந்தால், உயிருக்கு அத்தியாவசிய மான உறுப்பான மூளை, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றுக்கு அந்த ரத்தம் செல்லும்போது, கேன்சர் செல்களும் அங்கே போய் சேர்ந்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதுதான் அச்சத்துக்குக் காரணம். எனவே மார்பகப்புற்று செல்கள், மற்ற உறுப்புகளுக்குச் செல்லாமல் தடுக்கத்தான், அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை நீக்குகிறோம்.

இதுவரை, 80 சதவிகித புற்றுநோய்கள் எதனால் வருகின்றன என்பதே கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை. மரபணு மூலம் வருகிற கேன்சர் 5 - 10% தான். ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேல் கேன்சர் இருக்கும்பட்சத்தில், அந்தக் குடும்பத் தில் மற்ற பெண்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம்.

எப்படி அறிவது?

மார்பகத்தில் உள்ள புற்று செல், ஒரு செ.மீ அளவுக்கு வளர்ந்தால் மட்டுமே நம் கைகளுக்கு தட்டுப்படும். எனவே, பரிசோதனைகள் மூலமாக அதற்கு முன்னதாக கண்டுபிடிப்பதே உசிதம். அதற்கு வழிவகுக்கிறது 'மேமோகிராம்’ பரிசோதனை. 40 வயதை தொட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு தடவை இந்த பரிசோதனையை, தரமான மருத்துவமனையில் செய்துகொள்வது முக்கியம். ஏனென்றால், பரிசோதனை நிலையங்களில் தொழில்நுட்ப குறைபாடு இருந்தால்... இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துவிடும். இதன் காரணமாக, தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யும் அவலமும் ஏற்பட்டுவிடும்... ஜாக்கிரதை!

சுயபரிசோதனை செய்யலாம்!

என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு நோய்க்குமான அறிகுறிகளை எப்போதும் பேட்டிகள் மூலமாக சொல்வதில்லை. இதனால் பலர் வீணாக குழம்பி நிம்மதி இழப்பார்கள் என்பதுதான் காரணம். ஆனால், எல்லா பெண்களும் கண்டிப்பாக மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன். மார்பகப் பரிசோதனையின் முக்கிய அம்சமே, இயல்பான நிலையில் இருந்து மாறுபட்டிருப்பதைக் கண்டறிவதுதான். அப்படி எதுவும் புலப்பட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். மாதவிலக்கு சமயத்தில் இயல்பாகவே மார்பகம் ஒருவித கனத்த வலியுடன் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் பரிசோதனையைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு மாதமும் சுயபரிசோதனையைத் தொடருங்கள். மார்பகங்கள் எப்போதும் போல இருந்தால் பயப்படத் தேவையில்லை.

நீங்களே செய்யலாம் மார்பகப் பரிசோதனை!

Chestcancerகண்ணாடியின் முன் நின்று, கைகளை உயர்த்தியும், இடுப்பின் மீது கை வைத்தும் என இரு நிலைகளில் மார்பகம் எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

படத்தில் காண்பது போல, ஒரு கையை உயர்த்தி, மறு கையைக் கொண்டு மார்பகத்தை தொட்டு உணர்ந்து பழக வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சரிந்திருக்கும் மார்பகத்தை தூக்கிப் பார்ப்பதல்ல சுயபரிசோதனை. அகன்ற உள்ளங்கையால் மார்பகத்தை (மார்புக் காம்பில் வைத்து லேசாக) அழுத்திப் பார்ப்பதே மார்பகப் பரிசோதனை. அப்போது மார்பில் எங்காவது கட்டியிருந்தால், உள்ளுக்குள் நெருடுகிற மாதிரி இருந்தால் அது கைக்கு தென்படும். அப்படிஇருந்தால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Wednesday, June 5, 2013

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

983578_177999025695690_505456560_nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

Sunday, June 2, 2013

நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்குமான சிறந்த ஊட்டச்சத்து உணவுகள்

Healthy-Food-for-a-Flat-Stomachநீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த ஊடச்சத்து உணவுகள் சிறந்தது.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்பது ஒரு வகை கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று கேட்கலாம். பொதுவாக கொழுப்புக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு.


கெட்ட கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கிவிடும். ஆனால் நல்ல கொழுப்பானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கொழுப்பாகும்.


எப்படியெனில் இவை, தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயை மென்மையாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.


எனவே தான், ஆரோக்கியத்தைப் பற்றிய பல செய்திகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.


மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு மட்டுமின்றி, முதுமையைத் தள்ளி போடுதல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.


பெரும்பாலும், இந்த சத்து மீன்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும், சைவ உணவாளர்கள் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதால், சைவம் மற்றும் அசைவ உணவாளர்களுக்கு ஏற்றவாறு இந்த சத்து நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.


மீன்


பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். ஆனால் சால்மன் மற்றும் சூரை மீனில், இந்த சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.


ஆளி விதை


சைவ உணவாளர்களுக்கு ஆளி விதை சரியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாக இருக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான EPA மற்றம் DHA என்னும் ஃபேட்டி ஆசிட்டுகளும் உள்ளன.


ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயிலில் அதிகமான அளவில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இருப்பினும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், விர்ஜின் அல்லது பதப்படுத்தபடாத ஆலிவ் ஆயிலில் தான் நல்ல அளவில் உள்ளது.


வால்நட்


வால்நட்டில் இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் வளமாக உள்ளன. அவை வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். எனவே இதனை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தில் விரைவில் தோன்றும் முதுமைத் தன்மையும் தள்ளிப் போகும்.


முட்டை


முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. முட்டையைப் பற்றிய ஒரு கட்டுக்கதையில் முட்டை இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நல்ல கொலஸ்ட்ரால் முட்டையில் உள்ளது. எனவே இது இதயத்திற்கு நல்ல ஒரு உணவே.


ஆட்டு இறைச்சி


புற்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே புற்களை அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டால், அதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகளை பெறலாம்.


கனோலா ஆயில்


ரேப்சீடு எண்ணெயை பதப்படுத்தப்பட்டு கிடைப்பது தான் கனோலா ஆயில். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களில் முக்கியமானது. ஏனெனில் இதில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக உள்ளது.


கடல் உணவுகள்


கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


அவகேடோ


அவகேடோவில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், இதன் ஒரு பழத்தில் மட்டும் 250 மில்லிகிராம் நல்ல கொலஸ்ட்ராலை பெறலாம்.


பூசணிக்காய் விதைகள்


ஆளி விதைக்கு அடுத்தப்படியாக நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பது, பூசணிக்காய விதைகளில் தான்.

Friday, May 31, 2013

இன்று புகை ஒழிப்பு தினம்: புகைப்பழக்கத்தை நிறுத்த சில வழிகள்.....

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தின் போது பல சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை குடிப்பதால் ஏற்படும் உடல் நல பிரச்னைகளை விளக்கி சொல்கிறார்கள். கடந்த 1987ல் உலக சுகாதார நிறுவனம் மே 31ம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள்.

இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர்.

புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும்.

உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர்.

இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.

புகை பிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்று நோய், ஆஸ்துமா, காச நோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என்று பல நோய்கள் வருகின்றன. தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது.

புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப்பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரம்) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்கள். தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது.

ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்க கூடும். ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்.

புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும் அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.

அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர். இருமல், கை நடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகை பிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது. இளைஞர்களுக்கு புகை பிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது.

எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

பெரியோர் புகைப் பிடித்து விட்டு தூக்கி எறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் இளம் வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை. புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒன்றும் உலக மகா கஷ்டமான காரியமல்ல.

மனது வைத்தால் எல்லாம் முடியும். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம். வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை. மொத்தத்தில் புகையிலையை ஒழித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

smoking