தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Wednesday, May 29, 2013

இதய நோய்க்கு இனி சத்திர சிகிச்சை தேவையில்லை…

இருதயத்தில் ஓட்டைகள், சீரற்ற இருதய துடிப்புக்கள், வால்வுகள் அடைப்பு, உள்ளிட்ட இருதயம் சம்பந்தப்பட்ட பல நோய்கள் இதுவரை அறுவைச்சிகிச்சை மூலம் குணமாக்கப்பட்டன.

மார்பு எலும்புகளைத்திறந்து பின்னர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது.இதனால் கடுமையான வலி மற்றும் அறுவைச் சிகிச்சையின் போது உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலைமையும் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளன. தற்போது இதுபோன்ற அறுவைச்சிகிச்சைகளின்றி புதிய மருத்துவ சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருதய நோயாளியின் கால் அல்லது தோள் பட்டையில் உள்ள ரத்த நாளங்களில் சிறு துளையிட்டு அதன் வழியாக குழாய்களை உள்ளே செலுத்தி அதன் மூலம் வால்வுகளிலுள்ள அடைப்புகளை சரிசெய்தல், இருதய ஓட்டையைச் சரிசெய்தல், சீரற்ற இருதயத் துடிப்பு போன்றவற்றையும் சரிசெய்ய முடியும்.

இச்சிகிச்சை முறை தற்போது நடைமுறையிலிருப்பதாக அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள தனியார் மருத்துவ மனை டாக்டர் ஸ்பென்சர் கிங் தெரிவித்துள்ளார். இவர் முன்பு அமெரிக்கன் கல்லூரியில் இருதயப்பிரிவுத்தலைவராக இருந்தார்.

இந்த சிகிச்சையை 90 வயது நிறைந்தவர்களுக்கும் செய்ய முடியும். மேற்படி சிகிச்சை மூலம் உடலில் பெரிய அளவில் காயம் ஏற்படாதாகையால் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களிலேயே வீடு திரும்பலாம். சிகிச்சைக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

0 comments:

Post a Comment